Google AdSense Policy in Tamil

Google Adsense அக்கவுண்ட் உபயோகிப்பவர்கள் AdSense பாலிசியை பின்பற்ற வேண்டும்.பாலிசியை பின்பற்றவில்லை என்றால் அதில் எந்த மாதிரியான  பிரச்சினைகள் வரும் என்பதையும்,ஆக்சன்ஸ் பாலிசியை மதிக்க வேண்டிய அவசியமென்ன மற்றும் அதனால் ஏற்படும் நன்மை தீமையை பற்றி விரிவாக காணலாம்.

வலைத்தளத்தில் கட்டுரை எழுதும் நபர்களும் யூடியூபில் வீடியோ பதிவு செய்யும் நபர்களும் பாலிசியை கடைப்பிடித்து அதற்கேற்றார் போல் தங்களது பதிவுகளை பதிவு செய்ய வேண்டும்.

வலைத்தளத்தில் நீங்கள் செய்யும் சிறு தவறு கூட உங்கள் ஆட்சென்ஸ் (Adsense) பாதிக்கலாம். பெரும்பாலும் கூகுள் அட்சேன்ஸ் செயற்கை நுண்ணறிவு மூலமும் மனிதர்கள் மூலமும் வேலை செய்கிறது.

பெரும்பாலான பணிகளை செயற்கை நுண்ணறிவு (ai)கொண்ட இயந்திரங்கள் செய்து முடிக்கிறது. செயற்கை நுண்ணறிவு ஏற்படும் குறைகளை மனிதர்கள் கண்டறிந்து சரியான முறையில் இயக்குகின்றனர்.ஆதலால் நீங்கள் செய்யும் சிறு தவறுகூட பாலிசியை பின்பற்றாமல் இருந்தால் உங்கள் ஆட்சென்ஸ் இல் பிரச்சனைகள் வருவதற்கு நிறைய சாத்திய கூறுகள் இருக்கிறது.எந்தெந்த வழிகளில் பிரச்சினைகள் வரும் அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்பதை காணலாம்.

கிளிக் மற்றும் இம்பிரஷன்ஸ் (Clicks And Impressions)

 

google adsense ல் வரும் பெரும்பாலான பிரச்சினை களில் கிளிக்ஸ் மற்றும் இம்பிரஷன்ஸ் வழியாக வருகிறது. இதனை மிக உன்னிப்பாக கவனிக்கும் கூகுளின் செயற்கை நுண்ணறிவு மற்றும் கூகுளின் பணியாற்றும் பணியாளர்கள் எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.

இதனால் ஏற்படும் பிரச்சனைகளால்   கூகுளுக்கு விளபரங்கள் கொடுக்கும் விளம்பரதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை கருத்து  கொண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் மனிதர்களை வைத்து மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.  நம்மால் கிளிக்ஸ் மற்றும் இம்பிரஷன்ஸ் நடந்தது என்றால் கூகுளால் மிக எளிதில் கண்டறிய இயலும்.

Dont Clik Your Own click Ads செய்யக்கூடாதவை

வலைத்தளத்தில் வரும் விளம்பரங்களை நீங்கள் கிளிக் செய்யக்கூடாது அவ்வாறு செய்யும் போது உங்களுடைய அக்கவுண்டில் பாதிப்புகள் வரலாம்.நீங்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோக்கள் மற்றும் கட்டுரைகள் மட்டுமே உங்கள் பணியாக இருக்க வேண்டும்.

உங்கள் வலைத்தளத்தை திரும்பத் திரும்ப கூகுள் சென்று தேடுதல் மற்றும் விளம்பரங்கள் வலைத்தளத்தில் காட்டப்படுகின்றன என்று என்பதை அடிக்கடி பார்த்தல் ஆகியவை impressions ஆஹா எடுத்துக் கொள்ளப்படும்,அவ்வாறு செய்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

மேலும் சில சமயங்களில் நீங்கள் உங்கள் வலைதளத்தை பார்வையிடும் பொழுது உங்களை அறியாமல் உங்களது விளம்பரங்களை கிளிக் செய்வதற்கு அதிகமான சாத்தியக்கூறுகள் இருப்பதால் உங்களது வலைத்தளத்தினை கூகுள் சென்று பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

நண்பர்களுக்கு பரிந்துரைத்தல்(Dont Ask Anyone To Click Google Ads)

உங்களது வலைத்தளத்தினை உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரை செய்வதன் மூலம் பிரச்சினைகள் வருவதற்கும் அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது உங்கள் நண்பர்கள் தேவை இல்லாமல் விளம்பரங்களை கிளிக் செய்தால் அதுவும் கூகுள் ஆட்சென்ஸ்(adsense policy) பாலிசிக்கு எதிரானது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

கூகுளில் காட்டப்படும் விளம்பரங்கள் உங்கள் நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும் பட்சத்தில் அதனை கிளிக் செய்து அவர்கள் உபயோகித்தால் எந்தவித பிரச்சினைகளும் இன்றி எளிதில் விடுபடலாம்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து உங்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வந்தால் அது பாலிசிக்கு எதிரானது நீங்கள் அவ்வாறு நண்பர்களுக்கு பரிந்துரைத்து அவர்கள் அதைத் திரும்பத் திரும்ப தொடர்ந்து கிளிக் செய்தால் வந்தால் கூகுள் ஆட்சென்ஸ் (google adsense)ஆனது உங்கள் கணக்கை நிரந்தரமாக முடக்கி வைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

வலைதளத்தில் எந்த இடத்தில் விளம்பரத்தை காட்டலாம்(Choose location Your Ads)

நீங்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரைகளும் கூடுதல் உள்ளடக்கம் உள்ளவாறு எழுதுதல் அவசியம்.அவ்வாறு எழுதும் பட்சத்தில் தேவையான விளம்பரங்களை உங்களால் பயன்படுத்த கூகிள் ஆட்சென்ஸ் அனுமதி வழங்குகிறது.

வலைத்தளத்தில் கட்டுரை எழுதும் நாம் எந்தவித குறுக்கு வழியையும் பயன்படுத்தி நம்முடைய விளம்பரங்களை கிளிக் செய்யும் படி நம்முடைய பதிவில் வைக்கக்கூடாது. இதனை கூகிள் ஆட்சென்ஸ் ஒரு போதும் அனுமதிக்காது.

உங்கள் வலைதளத்தில் கட்டுரைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தேவையான இடத்தில் மட்டுமே விளம்பரங்களை காட்ட வேண்டும்,உங்களிடம் அதிகப்படியான வார்த்தைகள் இல்லாத பட்சத்தில் விளம்பரங்களை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிகமான விளம்பரங்களை வைத்தால் அதிகமான வருவாயை ஈட்ட முடியும் என்ற எண்ணத்தில் அதிகமான விளம்பரங்களை வலைத்தளத்தில் காட்டுதல் கூகுள் ஆட்சென்ஸ் பாலிசிக்கு எதிரானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வலைத்தளத்தில் கட்டுரைகளில் விளம்பரங்களை காட்டுவதை ஒருபோதும் அனுமதிக்காது அதிகமான உள்ளடக்கம் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு தரமான உள்ளடக்கத்தை எழுதுதல் கூடுதல் நல்லது.

Example 

உதாரணமாக உங்கள் வலைத்தளத்தில் டவுன்லோட் லிங்க் மற்றும் ஒரு இமேஜை பதிவு செய்யும்போது அதனை ஒட்டி உள்ள இடத்தில் விளம்பரங்களை காட்ட நினைக்கக்கூடாது குறைந்தது (150 பிக்சல்)என்ற  தூர அளவில் இடைவெளி விட்டு நீங்கள் கொடுக்கும் விளம்பரங்கள் இருக்க வேண்டும்.

பெரும்பாலான நபர்கள் செய்யும் தவறுகள் விளம்பரங்களை கிளிக் செய்தால் அதிகமான பணம் ஈட்ட முடியும் என்ற நோக்கில் இமேஜ் பக்கத்தில் அல்லது ஏதாவது ஒரு பைலை உள்ளடக்கத்தில் கொடுக்கும் பொழுது அதன் அருகில் விளம்பரங்களை வைத்தால் பார்வையாளர்கள் விளம்பரங்களை கிளிக் செய்தால் அதிகமான வருவாயை ஈட்ட முடியும் என்ற நோக்கில் செய்கின்றனர் இவ்வாறு செய்தால் ஆட்டோமேட்டட் கிளிக்ஸ் என்ற நோக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

உங்களுடைய அக்கவுண்டிற்கு பிரச்சினைகள் வருவதில் அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.சாப்ட்வேர் பயன்படுத்தி விளம்பரங்களை கிளிக் செய்ய வைத்தல் நண்பர்களுக்கு பரிந்துரைத்து விளம்பரங்களை கிளிக் செய்ய வைத்தல் ஆகியவை செய்தால் உங்களுடைய அக்கௌண்ட் உடனடியாக தடைபடும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு நிகழ்வும் கூகுளால் கண்காணிக்கப்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வலை தளத்திற்கு வரும் பார்வையாளர்கள்(How Your Site Is Promoted)

எந்தவிதமான குறுக்கு வழியையும் பயன்படுத்தி உங்கள் வலைதளத்திற்கு பார்வையாளர்களை கொண்டு வருவது கூகுள் அட்சன்ஸ் ஆனது ஒரு போதும் அனுமதிக்காது. தேவையில்லாத சாப்ட்வேர் பயன்படுத்தி உங்களது விளம்பரங்களை தானாக கிளிக் செய்யும் படி செய்தால் உடனடியாக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை இச்சமயத்தில் கூற நினைக்கிறேன்.

கூகுள் அனலிட்டிக்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்(Google Analytics)

யூடியூப் மற்றும் வலைத்தளங்களை வைத்திருக்கும் நபர்கள் கண்டிப்பான முறையில் கூகுள் அனலிடிக்ஸ் பயன்படுத்துதல் மிகவும் சிறந்தது. நம்முடைய தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை கூகிள் அனலிடிக்ஸ் இன் வழியாக காணலாம்.

உங்களுடைய தளத்தின் தன்மையை அறிய கூகிள் அனலிடிக்ஸ் (google analytics) மிகவும் பயன்படுகிறது ஏதேனும் தளத்தில் பிரச்சனைகள் இருந்தால் இந்த அனலிட்டிக்ஸ் வழியாக நம்மால் காண இயலும்.

கட்டுரைகள் எழுதுவதில் கவனம் செலுத்துதல்(Content  Guidelines)

மற்றொருவர் எழுதிய கட்டுரை(Display Google Ads)

நீங்கள் ஒரு கட்டுரை எழுதும் பொழுது மற்றொருவர் எழுதிய எந்த ஒரு செய்தி மற்றும் கட்டுரைகள் மற்றும் படங்கள் வீடியோக்கள் மற்றும் சுய விவரங்கள் அவர்களைப் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை அவரிடம் இருந்து அப்படியே பின்பற்றி எழுதக் கூடாது. அவ்வாறு எழுதினால் கூகிள் ஆட்சென்ஸ்(google adsense) விளம்பரங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

சொந்த படைப்புகளாக இருப்பது அவசியம் (Unique & Relevent Content)

நீங்கள் எழுதும் கட்டுரைகள் அல்லது வீடியோக்கள் உங்களின் சொந்த படைப்புகளாக இருப்பது கூடுதல் அவசியம். மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளை அப்படியே எடுத்து உங்கள் வலைத்தளத்தில் பதிவு செய்தால் அதனை எளிதில் கண்டு நீக்கும் தன்மை கொண்டது.

எனவே நீங்கள் பதிவுசெய்யும் கட்டுரைகள் மற்றவர்கள் கட்டுரைகளுக்கு மாறாக நேர்த்தியாகவும் புதுமையாகவும் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் விருப்பமாகவும் அதிகமான பார்வையாளர்களை சென்றடையும் நோக்கிலும் இருத்தல் அவசியம்.

நீங்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரைகளும் உலகத்திலுள்ள அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கவேண்டும் அந்த அளவிற்கு உங்களுடைய கட்டுரைகளின் தரம் இருத்தல் அவசியம்.

ஒரேமாதிரியான கட்டுரைகளை எழுதுவதை தவிர்த்தல் வேண்டும் தேவை இல்லாத வார்த்தைகள் அதற்கு சம்பந்தமே இல்லாத வார்த்தைகள் தவிர்த்தல் நல்லது.பாலினம் சம்பந்தமான கருத்துக்கள் அதனை தொடர்பான கட்டுரைகளை கூகிள் ஆட்சென்ஸ்(google adsense) ஒரு போதும் அனுமதிக்காது.முகம் சுளிக்கும் வார்த்தைகள் ஒருவரை புண்படுத்தி பேசுதல் கட்டுரைகள் மூலம் எழுதுதல் ஆகிய வற்றை தவிர்த்தல் நல்லது.

ஒரு நபரை தாக்கி வீடியோ பதிவு செய்தல் தகாத வார்த்தைகளால் பேசுதல் மனது புண்படும்படி வீடியோ பதிவு செய்தல் பாலினம் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்தல் ஆகியவை  பாலிசிக்கு எதிரானவை.

கட்டுரைகளுக்கு நடுவே வார்த்தைகளை மறைத்து வைத்தல் வேறு ஒரு இணையதளத்தில் உள்ள லிங்கை மறைத்து வைத்தல் ஆகியவை அறவே கூடாது.

விளம்பரங்களை கொடுக்கும் பொழுது கவனம் செலுத்துதல் (Ads Implementation)

google adsense ல் எடுக்கப்படும் விளம்பர கோடை தேவையில்லாத இடத்தில் பதிவு செய்வதை தவிர்த்தல் வேண்டும்மேலும் கோடை(adsense code) சுருக்குதல் செய்தல் கூடாது.

உங்கள் வலைதளத்தில் கூகுள் அட்சென்ஸ்(google adsense) இல் கொடுக்கப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக் கோடை(auto ads) பயன்படுத்துதல் கூடுதல் நல்லது. வலைத்தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் உங்களது உள்ளடக்கத்தை படிப்பதில் கவனம் செலுத்துவார்கள் அவ்வாறு கவனம் செலுத்தும் பொழுது உங்களுடைய விளம்பரங்கள் ஒரு தடையாக இருத்தல் கூடாது.

தேவையில்லாத சாப்ட்வேர் பயன்படுத்தி உங்கள் வலைத்தளத்தில் அதிகமான விளம்பரங்கள் மற்றும் தேவையில்லாத காரணிகளை தவிர்த்தல் நல்லது.

கூகுளில் வரும் பயனாளர்கள் உங்கள் தளத்திற்கு வருவது பயன் அடையும் நோக்கில் உங்களுடைய தலங்கள் இருத்தல் அவசியம் வருவாய் ஈட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கூகுள் ஆட்சென்ஸ் கோடை தவறான வழிகளுக்கு பயன்படுத்துவதை தவிர்த்தல் நல்லது.

தளம் நீக்கம் செய்யப்பட்டால் (Disabled Google Ads)

உங்கள் தளத்தில் ஏதேனும் தவறான கருத்துக்கள் பதியப்பட்டு இருந்தால் அந்த தளத்தில் காண்பிக்கப்படும் விளம்பரங்கள் நிறுத்தப்படும் அல்லது அந்த தளமானது முற்றிலுமாக முடக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

கூகிள் ஆட்சென்ஸ் ஐ வருவாய்க்காக காணாமல் நீங்கள் பணி செய்யும் ஒரு இடமாக காணவேண்டும் உங்களின் பணி சிறப்பாக இருந்தால் கூடுதல் வருவாயை ஈட்ட முடியும்.குறுக்கு வழியை கடைபிடித்தால் கூகிள் ஆட்சென்ஸ் இல் அதிக காலம் அல்லது சிறு காலம் கூட உங்களால் நிலைத்து நிற்க முடியாது நீங்கள் ஈட்டிய வருவாயை கூகிள் ஆட்சென்ஸ்(google adsense) எளிதில் முடக்கம் செய்துவிடும் என்பதை மனதில் கொண்டு பணியாற்ற தொடங்குங்கள்.

1 COMMENT

  1. ஆட்சென்ஸ் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் இந்த பதிவு மிக மிக முக்கியமான பதிவு…

    Thanks Active….

Leave a Reply to SIVASANKAR Cancel reply

Please enter your comment!
Please enter your name here