நாம் தொடங்கும் வலைத்தளத்திற்கு கூகுள் ஆட்சென்ஸ் லிருந்து அனுமதி பெறுவது எவ்வாறு என்பதை காணலாம்.

வலைதளத்தில் கட்டுரை எழுத முடிவு செய்தவுடன் கட்டுரைக்கான நோக்கம் என்ன என்பதை முதலில் ஆராய்ந்து கொள்ள வேண்டும்.நாம் எழுதும் கட்டுரைகள் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும் வண்ணம் எழுத வேண்டும்.

எந்த மாதிரியான கட்டுரை எழுதுவது

கூகுளின் பாலிசிக்கு ஏற்றார்போல் நாம் எழுதும் கட்டுரைகள் இருக்க வேண்டும்,அனைவருக்கும் பயன்படும் வகையில் கட்டுரை எழுதினால் போதுமானது.

கட்டுரைகளை எழுதுவதற்கு எந்த மாதிரியான வலைத்தளங்களை தேர்ந்தெடுக்கலாம், இரண்டுவகையான வலைதளங்களில் கட்டுரைகள் எழுதலாம். ஒன்று கூகுளின் ப்ளாக்கர் (blogger)இந்த இணையத்தளமானது இலவசமாக கிடைக்கிறது. மற்றொன்று wordpress வேர்ட்பிரஸ் இதில் இலவசமாகவும் கட்டண சேவை முறையிலும் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதிக் கொள்ளலாம்.

பிளாக்கரில் கட்டுரைகளை எழுதுவது எப்படி

கூகுளில் வலைதளமான பிளாக்கரில் கட்டுரைகளை எழுதுவதற்கு முதலில் ஜிமெயில் மின்னஞ்சல் பதிவு செய்து இருக்க வேண்டும். உங்களிடம் Gmail கணக்கு இருந்தால் கூகுளின் blogger.com சென்று உங்களுக்கு தேவையான இணையதள முகவரியை தேர்ந்தெடுத்து உங்கள் கட்டுரைகளை எழுதத் தொடங்கலாம்.

முதலில் blogger.com செல்ல வேண்டும்,கீழே காண்பிக்கப் பட்டுள்ள படத்தில் உள்ள இணையதளம் பிளாகர் ஆகும்

 

இந்த இணைய தளத்தை திறந்து உங்களுக்கான இணையதள முகவரியை உருவாக்கி பிளாக்கரில் உள் நுழைய வேண்டும்.

கட்டுரைகளை எழுதுவது எப்படி

ப்ளாக்கரில் எழுதும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயம் என்ன

எழுதும் கட்டுரைகள் கூகுளின் பாலிசியை பின்பற்றி எழுதவேண்டும்,எவ்வித தவறான வார்த்தைகளையும் பதிவு செய்தல் கூடாது, யார் மனதையும் புண்படும்படி வார்த்தைகள் இருக்காத வண்ணம் நம்முடைய கட்டுரைகள் இருக்க வேண்டும். பாலியல் சம்பந்தமான பதிவுகள், தவறான கருத்துக்கள் கொண்ட கட்டுரைகள் ஆகியவற்றை எழுதக்கூடாது.

மேலே குறிப்பிட்டுள்ள வற்றை தவறாது கடைபிடித்து கட்டுரைகளை எழுத தொடங்கலாம்.

வலைத்தளத்திற்கு Adsense அனுமதி பெறுவது எப்படி


1) குறைந்தது 30 கட்டுரைகள் எழுதி இருக்க வேண்டும்.
2) ஒவ்வொரு கட்டுரைகளும் 1500 வார்த்தைகள் இருத்தல் அவசியமானது.
3) மேலும் நீங்கள் யார் என்பதையும் உங்களுடைய சுய விவரங்களுடன் அடங்கிய (About Us Page) இணைத்தல் அவசியம்
4) மேலே குறிப்பிட்டுள்ள பக்கத்தினை உருவாக்க பிளாக்கரில் இதற்கென்று தனியாக Page Option) கொடுக்கப்பட்டிருக்கிறது அதில் சென்று தொடங்கி கொள்ளலாம்.
4) மேலும் உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதைப்பற்றிய பக்கத்தினை இணைத்தல் அவசியம் (Contact Page)
4) வலை தளத்திற்கு தேவையான (Privacy Policy) பக்கத்தினை இணைக்க வேண்டும்.

வலைதளம் ஆனது example.blogspot.com இவ்வாறு இருந்தால் பணம் செலுத்த அவசியம் இல்லை. இவ்வகை வலைதளத்திற்கு எவ்வித பாதை கட்டணமும் வருட கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இது கூகுளின் வலைத்தளமாக இருப்பதால் இலவசமாக உபயோகித்துக்கொள்ளலாம்.

பிளாக்கர் இணையதளத்தில் கட்டுரைகளை எழுதி இருந்தால் வலை தளமானது பணம் சம்பாதிக்க வேண்டிய நிலை அடைந்தவுடன் பிளக்காரின் Earnings Tap சென்று பார்த்தால்
(Sign Up Option) அதன் வழியாக AdSense இணைக்கலாம்.

மேலே குறிப்பிட்டுள்ளவாரு வலைதளத்தை AdSense வுடன் இணைத்தால் மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு வலைத்தளத்திற்கு பணம் செலுத்த அவசியமில்லை.

வலை தளமானது உயரமாக இருக்க வேண்டும் என்றால், உதாரணமாக டாட் காம் டாட் இன் போன்ற உயர் தர இணையதளமாக இருக்கவேண்டும் என்றால் Domain வாங்குவது அவசியம்.டொமைன் வாங்குவதற்கு பணம் செலுத்துதல் வேண்டும்.

WordPress ல் கட்டுரை எழுதுவது எப்படி

பிளாக்கரில் கட்டுரை எழுதுவது போன்றே WordPress லியும் கட்டுரைகள் எழுதலாம்.

Domain என்றால் என்ன
வலை தளத்திற்கான உயர்தர முகவரியை (.com,.in,.net,.org,…etc ) வழங்கும் அமைப்பு ஆகும்.

டொமைன் ஆனது கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு வலைதளத்தில் உள்ள முகவரியோடு இணைத்துக்கொள்ளலாம்,அல்லது வலைதளத்தில் கட்டுரைகள் எழுதிய பின்னரும் Domain இணைத்துக் கொள்ளலாம்.

டொமைனை வழங்குவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன, உங்களுக்கு ஏற்ற இணையத்தளங்களை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

டொமைன் வாங்குவது எப்படி

வலைத்தளத்தில் டொமைனை இணைப்பது எப்படி

மேலே குறிப்பிட்டுள்ள இவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டும் போதாது, உங்கள் வலைத்தளத்தை கூகுளுக்கு தெரியப்படுத்த வேண்டும். வலைதளத்தில் கட்டுரை எழுதினால் மட்டும் போதாது, உங்கள் வலைதளம் கூகுள் பார்வைக்கு தெரியும்படி செய்தல் வேண்டும்,அவ்வாறு செய்தால் மட்டுமே உங்கள் வலைதளம் ஆனது பார்வையாளர்களால் பார்க்க இயலும்.

வலைதளத்தை கூகுளுக்கு எவ்வாறு தெரியப்படுத்துவது

வலைதள முகவரியை கூகுளுக்கு தெரியப்படுத்தினால் மட்டுமே நம் வலைத்தளத்தை பார்வையாளர்களால் பார்க்க முடியும்

 

https://search.google.com/search-console இந்த இணைய தளம் சென்று உங்கள் வலைத்தள முகவரியை இணைத்துக் கொள்ள வேண்டும்.

வலை தளத்தை AdSense இணைப்பது எப்படி

1)Login AdSense Dashboard
2)Select Sign Up
3)Give Your Website

How To Place Adsense Ads

கூகுள் ஆட்சென்ஸ் லிருந்து விளம்பரங்களை தேர்வு செய்து வலைத்தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது என்பதை காணலாம்,மேலும் Google Adsense எத்தனை வகையான விளம்பரங்கள் இருக்கின்றன அதிலிருந்து எவ்வாறு விளம்பரங்களை எடுப்பது என்பதை விரிவாக பார்க்கலாம்.

கூகுள் அட்சென்ஸ் உள்ள விளம்பரங்கள் சக்தி வாய்ந்ததாகவும் அதிகப்படியான பார்வையாளர்களை சென்றடையும் திறன் கொண்டதாகவும் இருக்கின்றன.
கூகுள் அட்சென்ஸ் லிருந்து விளம்பரங்களை எடுத்து வலைத்தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.

தானாக இயங்கும் விளம்பரங்கள் (Auto Ads)

கூகுள் ஆட்சென்ஸ் லிருந்து இயங்கும் தானியங்கி விளம்பரங்களை வலைத்தளத்தில் பதிவு செய்தால் நல்லதாகும். நாம் பதிவு செய்திருக்கும் அனைத்து விதமான கட்டுரைகளுக்கும் தானாக இயங்கும் விளம்பரங்கள் (auto ads) அனைத்து பக்கத்திற்கும் காண்பிக்கப்படும்.

புதியதாக வலைத்தளத்தை உருவாக்கி கூகுள் ஆட்சென்ஸ் அனுமதி பெற்றிருந்தால், கூகுள் ஆட்சென்ஸ் சென்று தானாக இயங்கும் விளம்பரங்களை எடுத்து உங்கள் வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

பயனாளர்கள் பயன்பெறும் வகையில் வலைதளத்தில் விளம்பரங்களை காட்டும் தன்மை கொண்டது (Auto ads) தானாக இயங்கும் விளம்பரங்கள். வலைத்தளத்தில் உள்ள அனைத்து பக்கத்திற்கும் விளம்பரங்களை கொண்டு சேர்க்கும் பணியை மிகவும் சிறப்பாகவும் அதிக சக்தி கொண்ட தாகவும் செய்கின்றன.பயனாளர்களுக்கு ஏற்றவகையில் விளம்பரங்களைக் காண்பிக்கும் தன்மை கொண்டதாகும்.

வலைத்தளத்திற்கு போதுமான விளம்பரங்களை தரும் வகையில் Auto ads தானாக இயங்கும் விளம்பரங்கள் பெருமளவில் பங்காற்றுகின்றன. தானியங்கி விளம்பரங்களில் அதிகப்படியான விளம்பரங்கள் வந்தால் உங்களால் கட்டுப்படுத்த இயலும். வலைத்தளத்தில் உள்ள உள்ளடக்கத்திற்கு இடையில் விளம்பரங்களை தானாக கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தானியங்கி விளம்பரங்களை உங்கள் வலைதளத்தில் கொடுப்பதன் மூலம் அதிகமான வருவாயை ஈட்ட முடியும்,பயனாளர்களுக்கு தகுந்தவாறும் நீங்கள் எழுதிய கட்டுரைகளுக்கு தகுந்த விளம்பரங்களை காட்டும் வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

உதாரணமாக பயனாளர்கள் உங்கள் வலை தளத்தை பார்வையிடும் பொழுது தானாக இயங்கும் விளம்பரங்கள் ஆங்காங்கே காண்பிக்கப்படும். மேலும் பயனாளர்கள் ஒரு பதிவை படித்து முடித்தவுடன் மற்றொரு பதிவை படிக்க மற்ற பதிவை கிளிக் செய்தவுடன் தானாக இயங்கும் விளம்பரங்கள் மொபைல் திரையில் பெரிதாக காண்பிக்கப்படும்.

இவ்வாறாக பெரிய திரையில் காண்பிக்கப்படும் அளவிற்கு தானியங்கி விளம்பரங்கள் கூகுள் அட்சென்ஸ் ல் பெருமளவில் பங்காற்றுகிறது. பெரும்பாலான இணையதளங்களில் இந்த தானியங்கி விளம்பரங்கள் அதிகமாக காண்பிக்கப்படுகின்றன.

Auto Ads இருந்து வரும் விளம்பரங்கள் அதிகப்படியான வருவாய் பெற வழிவகை செய்கிறது. சாதாரணமாக நீங்களாக வலைதளத்தில் கொடுக்கும் விளம்பரங்கள் ஒரு இடத்தில் மட்டுமே இருக்கும் தன்மை கொண்டது.ஆனால் இந்த தானியங்கி விளம்பரங்கள் வலைத்தளத்தில் எந்த மூலை முடுக்குகளிலும் காண்பிக்கப்படும்,பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் அவர்களுக்கு தேவையான விளம்பரங்களை தேவையான இடங்களில் காண்பிப்பது இந்த தானியங்கி விளம்பரங்களில் பணி ஆகும்.

தானியங்கி விளம்பரங்களை நமது வலைதளத்தில் எவ்வாறு பதிவு செய்யலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் காணலாம்.

Sign in to google adsense
1)Clicks ads > overview
2)In table of you can see by site
3)Unter the get code option
4Copy and paste the ads code on your website <head > tag unter place it
5)For Blogger Click edit Html on Template


Open Edit Html Head under paste add code


And then you can see the All site option
And then Unter your site turn on auto ads

மூன்று வகையான பாரம்பரிய விளம்பரங்கள் Google Adsense செயல்படுகின்றன,இவ்வகை விளம்பரங்கள் பார்ப்பதற்கு அழகாகவும் பார்வையாளர்களை கவரும் வண்ணமும் வடிவமைக்கப்பட்டுள்ளன,இவ்வகை விளம்பரங்கள் உங்கள் வலைத்தளத்தில் உள்ள உள்ளடக்க தோடு ஒத்துப்போகும் அளவில் அட்சன்ஸ் AdSense ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று வகை விளம்பரங்கள் கூகிள் ஆட்சென்ஸ் இல் பெருமளவில் பங்கு வகிக்கின்றன,பார்வையாளர்களை கவரும் வண்ணமும் இந்த விளம்பரங்கள் உபயோகிக்கப்படுகின்றன.

இந்த விளம்பரங்களில் உள்ள சிறப்பு நீங்கள் எழுதும் வலைத்தளத்தில் உள்ளடக்கத்தை போன்றே விளம்பரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நீங்கள் எழுதும் கட்டுரைகளும் விளம்பரங்களுடன் ஒத்துப் போகும் வகையில் இருப்பது ஒரு சிறப்பாகும்.

பார்வையாளர்களை கவரும் விளம்பரங்கள்

தளத்திற்கு வரும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரங்கள் அமைந்துள்ளது.காரணம் விளம்பரங்களில் தெளிவு திறன்மிக்க படங்கள் மற்றும் விளம்பரங்களில் காண்பிக்கப்படும் எழுத்துக்கள் மற்றும் விளம்பரங்களின் தோற்றம் ஆகிய காரணங் களால் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

விளம்பரங்கள் கைப்பேசி மற்றும் கணினி மற்றும் டெக்ஸ்டாப் போன்ற சாதனங்களில் மிக அழகாக காட்டப்படுகின்றன.

விளம்பரங்களை உங்கள் வசதிக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து கொள்ளலாம், விளம்பரங்களில் உள்ள நிறத்தை திருத்துவது வண்ணங்களை குறைக்கவும் அதிகரிக்கவும் செய்யலாம். என பலவகையான செயல்களை செய்து தளத்திற்கு ஏற்றார்போல் விளம்பரங்களை பார்க்கும் வண்ணம் வடிவமைத்துக் கொள்ளலாம்.

Display ads

வலைத்தளங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் விளம்பரங்களில் புகைப்பட விளம்பரமும் ஒன்றாகும். இவ்வகை விளம்பரங்கள் அதிகமான பார்வையாளர்களுக்கு சென்றடையும் நோக்கில் உருவாக்கப்பட்டது ஆகும்.

பார்வையாளர்களை கவர இவ்வகை விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் கூகுளில் காட்டப்படும் பெரும்பாலான விளம்பரங்கள் புகைப்பட வடிவிலேயே இருப்பது பயனாளர்களை வெகுவாக கவர்கிறது,இது போன்ற விளம்பரங்கள் அதிகமான மக்களை சென்று அடைவதால் இந்த விளம்பரங்களை இணையதளங்களில் பார்க்கலாம்.

உதாரணமாக ஒரு வலைத்தளங்களில் எழுத்துக்களை விட புகைப்படங்களுக்கு அதிகம் வரவேற்பு இருக்கும், அந்தக் காரணத்தினால் தான் இந்த புகைப்பட விளம்பரங்கள் அதிகமான வெளியீட்டாளர்கள் உபயோகம் செய்கின்றனர்.

கூகுள் அட்சென்ஸ் இல் இருந்து விளம்பரங்களை எடுக்கும்பொழுது கூடுமான வரைக்கும் Responsive Ads எடுப்பது சிறந்தது. இந்த விளம்பரங்கள் உள்ளடக்கத்திற்கு ஏற்றார்போல் தானாக மாறிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Response Ads விளம்பரங்கள் பல்வேறு வகையில் தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தது,தேவையான நேரங்களில் தேவையான இடத்தில் இந்த விளம்பரங்கள் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும் தன்மை இந்த Responsive Ads உண்டு.

1)Sign in to google adsense
2)Clicks ads > overview
3)In table of you can see by ad unit

4)Give name and  select ad size and create add code

In feed ads

 

1)Sign in to google adsense
2)Clicks ads > overview
3)In table of you can see by ad unit

4)Create ad unit name and get code and paste your website html page

 

இந்த விளம்பரங்கள் google Adsense அனுமதி கிடைத்த அனைத்து வெளியீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.வருவாய் ஈட்டுவதற்கு நல்லதொரு புதிய ஒரு வாய்ப்பை வழங்குகிறது, பயனர்களை கவரும் வண்ணமும் மொபைல் மற்றும் கணினி மற்றும் டெக்ஸ்டாப் போன்ற தளங்களில் சிறந்து விளங்கும் தன்மையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த விளம்பரம் ஆகும்.

நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு இடையே இவ்வகை விளம்பரங்களை கொடுக்கும்பொழுது பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த விளம்பர தொகுப்பாக திகழ்கிறது.

In Feed விளம்பரங்கள் வலைதளத்தில் எழுதும் ஒரு உள்ளடக்கத்தின் இடையே அழகாக பொருந்துவது மட்டும் அல்லாது பார்வையாளர்களை எளிதில் கவர்ந்திழுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த (in feed ads) விளம்பரங்களில் எழுத்துக்கள் வருவது சிறந்த தாக அமைந்துள்ளது.

In article Ads

 

1)Sign in to google adsense
2)Clicks ads > overview
3)In table of you can see by ad unit

 

4)Create ad unit name and get code and paste your website html page

இந்த In Article விளம்பரங்கள் கூகுள் ஆட்சென்ஸ் அனுமதி கிடைத்த அனைவருக்கும் வழங்கப்படுகிறது, பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் சிறந்த விளம்பர அனுபவத்தை article விளம்பரங்கள் கொடுக்கின்றது.

Article விளம்பரங்கள் நீங்கள் எழுதும் கட்டுரைகளில் பத்திகளுக்கு இடையே அழகாக பொருந்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் கட்டுரைகளை படிக்கும் பொழுது article விளம்பரங்கள் பயனாளர்களை அதிகப்படியான ஈர்க்கும் வகையில் Google Adsense ஆ ல்வடிவமைக்கப்பட்டுள்ளது.

Article விளம்பரங்கள் பயனாளர்கள் உங்கள் உள்ளடக்கத்தை படிக்கும்பொழுது பத்திகளுக்கு இடையே article விளம்பரங்கள் காட்டப்படுகின்றன என்பதை மறந்து கட்டுரைகளை படிக்கும் பயனாளர்கள் விளம்பரத்தில் உள் நுழைவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது.

Article விளம்பரங்களினால் கூடுதல் வருவாயை ஈட்ட நம்மால் முடியும்.நம்முடைய கட்டுரைகள் படிப்பதற்கு எளிதாகவும் பயனாளர்களை சென்றடையும் வகையிலும் இருக்க வேண்டும், article விளம்பரங்களை கட்டுரை எழுதும் பொழுது பத்தி களுக்கு இடையே கொடுத்தால் அதிகமான வருவாயை ஈட்ட முடியும்.

எழுதும் கட்டுரைகளை பொருத்தே இந்த Article விளம்பரங்கள் உள்ளடக்கத்திற்கு தகுந்தார்போல் தானாக கட்டுரைகளில் தலைப்பிற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.எழுதும் கட்டுரை தரம் வாய்ந்ததாக இருந்தால் article விளம்பரங்களில் இருந்து அதிகமான வருவாய் பெற முடியும்.

Matched Content Ads

 

Matched Content விளம்பரங்கள் Google Adsense அனுமதி கிடைத்த அனைவருக்கும் கிடைப்பதில்லை,இந்த விளம்பரங்களை பெறுவதற்கு உங்கள் வலைத்தளம் ஆனது சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

தேவையான தகுதிகள்

வலைத்தளத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும், எந்த அளவிற்கு உங்கள் தளத்தில் பார்வையாளர்கள் நேரத்தை செலவிடுகின்றனர் என்பதைப் பொருத்தும்,உங்கள் தளத்தின் மூலம் எந்த அளவு பணம் கிடைக்கிறது என்பதைப் பொருத்தும்.வலைத்தளத்தில் பார்வையாளர்கள் எந்த வகையில் நேசிக்கின்றனர் என்பதை பொருத்தம் இந்த விளம்பரங்கள் கிடைக்கப் பெறும்.

மேலும் வலை தளத்தில் எந்த அளவிற்கு கட்டுரைகள் இருக்கின்றன, மேலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கட்டுரை தரமானதாக இருக்கிறதா என்பதைப் பொருத்தும்,மேலும் கட்டுரைகள் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தால் இந்த Matched Content விளம்பரங்கள் உங்கள் தளத்திற்கு அனுமதி பெறப்படும்.

உங்கள் தளத்திற்கு இந்த Matched Content விளம்பரங்கள் இருந்தால் அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

1)Sign in google adsense
2)Click sites
3)Click matched content
இவ்வாறு தேடும்பொழுது Matched content விளம்பரங்கள் இல்லை என்றால் உங்கள் தளமானது தகுதி பெறவில்லை என்று அர்த்தம்.


If your site eligible
தளமானது Matched content தகுதி அடைந்திருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் அட்சென்ஸ் ல் சென்று தேடினால் Create Matched content என்று இருக்கும்.
எவ்வாறு Matched content code எடுப்பது
1)sign in google adsense account
2)clicks ad unit
3)select matched content
4)Give Matched content unit name

5)style section match your site
6)size choose the size fits layout
7)google recommend responsive layout
8)custom size (width:height 2:1 horizantel layout (or)1:2 vertical layout
9)click save and get code
10)copy and paste the Matched content ad code in to the html source code on our page

இந்த Matched Content விளம்பரங்கள் நீங்கள் எழுதும் உள்ளடக்கத்தை போன்றே இருப்பதால் அதிகப்படியான வருவாய் கிடைக்கிறது.இந்த விளம்பரங்களை பெறுவதற்கு உங்கள் தளமானது தரம் மிகுந்ததாக இருக்கவேண்டும். உங்கள் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் 10% அளவு உங்கள் தளத்தில் தங்கி தளத்தினை பார்வை இட வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகள் அனைத்தும் இருந்தால் தளத்திற்கு Matched Content விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.

தளத்தில் நீங்கள் கொடுக்கும் கட்டுரைகள் பயனாளர்களுக்கு பிடிக்கும் வகையிலும், பயனாளர்கள் திரும்ப-திரும்ப உங்கள் தளத்தினை பார்வையிடும் வண்ணமும் கட்டுரைகள் இருத்தல் அவசியம் ஆகும்.

Matched Content விளம்பரங்கள் கிடைத்த தளங்கள் அதிகப்படியான வருவாயை ஈட்டுகிறது என்பது ஒரு நிதர்சனமான உண்மை.Matched Content விளம்பரங்களில் உள்ள தனி சிறப்பு நீங்கள் எழுதும் கட்டுரைகளில் தலைப்பு அல்லது உள்ளடக்கத்தின் தொகுப்பு போன்றே இருப்பதாகும்.

LINK ADS

Link விளம்பரங்களும் கட்டுரையின் உள்ளடக்கமும் ஒரே மாதிரியாக தோன்றும் தன்மை கொண்டது.உதாரணமாக தளத்தில் டவுன்லோட் என்று இருந்தால் கொடுக்கும் link ads விளம்பரமும் டவுன்லோட் என்று இருக்கும் .

வலைத்தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் விளம்பரங்களின் மீது அதிக நாட்டம் கொண்டு விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதால் அதிகமான வருவாயும் நமக்கு கிடைக்கிறது.

Link Ads விளம்பரங்கள் எழுத்தில் மட்டுமே பெரும்பாலும் கொடுக்கப்படும். படங்கள் இல்லாத விளம்பரமாக இருப்பதால் இந்த link விளம்பரங்கள் எழுதும் கட்டுரைகளில் இடையில் கொடுத்தால் பயனாளர்கள் கிளிக் செய்து பார்ப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த விளம்பரங்களை கூகிள் ஆட்சென்ஸ் இல் இருந்து எவ்வாறு எடுக்கலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்துக் கொள்ளலாம்.

Sign in google adsense account

1)Click ads
2)Click ad units
3)Click link ads
4)Give your link ads name
5)Ads size section we are recommend responsive selected

6)Click and save get code

 

7)Copy the code <body><body> அதாவது கட்டுரையில் பதிவுகளுக்கு இடையில் Html Page கொடுக்க வேண்டும்.

8)Click done

Amp Ads

 

Amp விளம்பரங்கள் சாதாரண விளம்பரங்களைப் போல் அல்லாமல் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. இதற்கென்று கூகுள் அட்சென்ஸ் இல் தனியாக இடம் கொடுக்கப்பட்டுள்ளது,amp விளம்பரங்கள் வலைத்தளங்களில் வேகமாகவும் பார்வையாளர்களை கவரும் வகையிலும் செயல்படுகின்றன.

Amp ads இன்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும்பொழுது வலைத்தளங்களை பார்வையிடும் நபர்களுக்கு விரைவில் சென்று அடைவதால் விளம்பரங்களை வழங்கும் வெளியீட்டாளர் களுக்கும் கட்டுரை எழுதுபவர்களுக்கும் பயனளிக்கிறது. இந்த amp விளம்பரங்கள் அதிகமான வருவாய் பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கிறது.

Amp ads பயன்படுத்த உங்களுடைய வலைதளம் ஆனது ஒரு Amp Website ஆக இருப்பது அவசியம். வலைதளத்தை ஒரு எம்பி (AMP) இணையதளமாக மாற்றிய பின்பு கூகுள் அட்சென்ஸ் இருந்து AMP விளம்பரங்களை எடுத்து உங்கள் வலைத்தளங்களில் பதிவிட்டு கொள்ளலாம்.

AMP இணைய தளமாக இருந்தால் மட்டுமே இந்த விளம்பரங்கள் வலைதளங்களில் தோன்றும் என்பதை நினைவில் கொள்க.

இந்த விளம்பரங்கள் இணையதள வேகம் குறைவாக உள்ள பொழுது சீக்கிரமாக தோன்றுவது ஒரு தனி சிறப்பாகும்.

 

Amp விளம்பரங்களை பயன்படுத்தினால் கூடுதல் வருவாயை ஈட்ட முடியும். வலைத்தளங்களில் விளம்பரங்கள் தோன்ற அதிக நேரங்கள் எடுத்துக் கொள்ளாமல் குறைவான நேரத்தில் தோன்றுவதால் கட்டுரைகளை பார்வையிடும் நபர்களுக்கு விளம்பரங்கள் எளிதில் சென்றடைகிறது.

 

Sign in to google adsense
1)Clicks ads > overview
2)In table of you can see by site
3)ou can see amp site code side corner


4Copy and paste the amp ads code on your website <head > tag unter place it
5)For Blogger Click edit Html on Template

1 COMMENT

Leave a Reply to SIVASANKAR Cancel reply

Please enter your comment!
Please enter your name here