What Is Invalid Activity In Tamil
நாம் உபயோகிக்கும் யூடியூப் சேனல் மற்றும் வலைதளத்தில் கூகுள் ஆட்சென்ஸ் ஆல் காண்பிக்கப்படும் விளம்பரங்களில் தொடர்ந்து கிளிக் மற்றும் impressions செயற்கையாக நடைபெற்றால் Invalid Activity பிரச்சனைகள் வரும்.
Invalid Activity பெரும்பாலும் வலைதளத்திற்கு வரும் போக்குவரத்து மற்றும் தவறான விளம்பர கிலிக்குகளால் நடைபெறுகின்றன.
வலைத்தளம் அல்லது யூடியூப் சேனலில் இருந்து கிடைக்கும் பணத்தின் அளவானது இயற்கைக்கு மாறாக செயற்கையாக திடீரென அதிகமானால் வலைத்தளத்தில் தவறான செயல்கள் வருகிறது, என்பதை அறிந்து கொள்ளலாம்.
Invalid Activity பிரச்சனையை எவ்வாறு தடுப்பது
கூகுள் ஆட்சென்ஸ் தரப்பிலிருந்து Invalid தடுப்பதற்கு தானியங்கி அதாவது (AI)பயன்படுத்தியும் மனிதர்களை கொண்டும் பிரச்சினைகளை கையாளுகிறது. இதிலிருந்து விடுபட நாம் கூகுள் ஆட்சென்ஸ் பாலிசியை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.
உங்கள் வலைத்தளத்திற்கு வரும் பயனாளர்களுக்கு விளம்பரங்களை ஊக்குவிப்பது தவிர்க்க வேண்டும். உங்களைப் போன்ற ஒரு நபர் தான் கூகுளில் விளம்பரங்களை கொடுக்கிறார்கள் என்பதை உணர்ந்து தவறான வழிகளில் உங்கள் விளம்பரங்களை காண்பித்து தவிர்த்தல் நல்லது.
விளம்பரங்களை பார்வையாளர்கள் இயற்கையாக கிளிக் செய்தால் மட்டுமே இவ்வித பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதற்கு மாறாக செயற்கையாக விளம்பரங்களை கிளிக் செய்யும் படி வைத்து வருவாய் ஈட்ட நினைத்தால் அந்த வருவாயை கூகுள் அட்சன்ஸ் எனது திரும்ப எடுத்துக்கொள்ளும்.
வலைத்தளத்தில் செய்யும் தவறுகள்
பெரும்பாலான வலைதளங்களில் புகைப்படங்களை அதிகமாக இருக்கும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் புகைப்படத்தை ஒட்டி உள்ள இடங்களில் விளம்பரங்களை காண்பிக்க நினைப்பது தவறாகும்.
உதாரணமாக PDF FILE Download Link கொடுக்கும் பொழுது அதன் அருகே விளம்பரத்தை கொடுப்பது தவறு, குறைந்தது இடைவெளி விட்டு விளம்பரம் என்கிற வார்த்தையை கொடுக்கவேண்டும்.
அதிகப்படியான கிளிக்குகள் நடந்தால் வலைத்தளத்தில் அதிகமான வருவாய் ஈட்ட முடியும் என்ற நோக்கில் நாம் செய்யும் ஒருசில தவறின் காரணமாக கூகுள் அட்சன்ஸ் எனது நிரந்தரமாக முடக்கப்பட்டு பயனற்ற முறையில் போகும் வாய்ப்பு இருக்கிறது.
விளம்பரங்களில் இருந்து கிடைக்கும் பயன்கள்
இன்றைய நவீன உலகில் ஒரு நிறுவனம் முன்னேற விளம்பரங்கள் முக்கியமாக பங்கை வகிக்கின்றன. வணிக நிறுவனம் மற்றும் யூட்யூப் சேனல் நடத்துபவர்கள் பயன்பெற விளம்பரங்கள் உறுதுணையாக இருக்கின்றன.வெளியீட்டாளர்கள் விளம்பரங்களில் இருந்து கிடைக்கும் பணம் மூலம் குடும்பங்களை நடத்துவதற்கு உண்டான பணத்தை விளம்பரங்களின் மூலம் பெறுகின்றன.
அனைவரும் விளம்பரங்களை நம்பி உள்ளதால் விளம்பரங்களை கண்காணிக்க கணினிகள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம் ஆகிறது. இதனை கருத்தில் கொண்டு விளம்பரங்களில் இருந்து வரும் மோசடிகளை தவிர்க்க Google பல வழிகளில் முயற்சி செய்கிறது.
தவறுகள் நடப்பது எப்படி
வெளியீட்டாளர்கள் பதிவு செய்யும் எந்த ஒரு கட்டுரைகளையும் பயனாளர்கள் இயற்கையாக வந்து பார்த்தால் எந்தவித பிரச்சினைகளும் வராது.செயற்கையாக வலைதளத்தை ஒருவருக்கு வலுக்கட்டாயமாக திணிக்கும் பட்சத்தில் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விளம்பரத்தை பயனாளர்கள் கிளிக் செய்து அதன் மூலம் எந்த வித பயனும் அடையாமல் இருந்தால் இதனை Google கண்காணித்து விடுகிறது.
இதனால் விளம்பர தாரர்கள் பாதிக்கப்படுகின்றனர், விளம்பரதாரர்கள் ஒரு விளம்பரத்தை கொடுக்கும்பொழுது பயனாளர்கள் உபயோகமாக அதனை கிளிக் செய்து உபயோகித்தால் விளம்பரங்களைக் கொடுக்கும் விளம்பரதாரர்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது.
தப்பிப்பது எப்படி
பணம் கொடுத்து வலைதளத்திற்கு பார்வையாளர்களை கொண்டு வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் சரியான வழிகளை பயன்படுத்தி போக்குவரத்தை அதிகரிக்கலாம்.செயற்கையான முறையில் போக்குவரத்து அதிகப்படுத்த நினைத்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக தன்னுடைய வலைதளத்தில் காண்பிக்கப்படும் விளம்பரங்களை கிளிக் செய்தால் நிரந்தரமாக வைக்கப்படும் அவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும்.
கூகுள் ஆட்சென்ஸ் இல் விளம்பரங்களை சோதனை செய்து பார்ப்பதற்கு தனியாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக விளம்பரங்கள் கிளிக் செய்து எவ்வாறு இயங்குகின்றன என்பதை உங்களால் காண முடியும்.
வலைத்தளத்தை திரும்பத்திரும்ப ஓபன் செய்து பார்ப்பது இம்பிரஷன்ஸ் அதிகரிக்கும், இதன் விளைவாகவும் பிரச்சனைகள் வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது.
பதிவுகள் பதிவு செய்வதோடு உங்களின் பணி நிறைவடைகிறது வலைதளம் எந்த மாதிரி இருக்கிறது என்பதை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரே மொபைலில் அல்லது கணினியில் திரும்பத் திரும்ப இதே தவறை செய்தால் ஒருநாள் உங்கள் கூகுள் அட்சன்ஸ் நிரந்தரமாக நிறுத்தப்படும்.
How Google Stop Invalid Activity
வலைதளத்தில் தவறான முறையின் பார்வையாளர்களைக் கொண்டு வந்தால் கூகுளால் எளிதில் கண்டறிய முடியும்.இதற்கென்று நவீனத்துவம் பெற்ற விஞ்ஞானிகளையும் தானியங்கி மெஷின் களையும் வைத்துள்ளது.
பெரும்பாலும் Invalid Activity பிரச்சனையை வலைதளத்திற்கு வரும் போக்குவரத்தை வைத்து எளிதில் கண்டறிகிறது.இதனை கண்டறிய Google Analytics மற்றும் AI பெரிதும் நம்பியிருக்கிறது.
Google Analytics மூலம் பார்வையாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள் வலைதளத்தில் எந்த விதமான விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்கின்றனர் போன்ற தரவுகளை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.
வலைதளத்தில் திடீரென CTR அதிகமானால் தவறான போக்கில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கூகுளின் இயந்திரமானது இன்ஜினியர்களுக்கு பரிந்துரைக்கிறது.
இதன் மூலம் வலைத்தளத்தில் ஏற்படும் Invalid Activity பிரச்சனையை எளிதில் கண்டறிந்து வலைதளத்தை முடக்குவது தொடு கிளிக்கலில் இருந்து கிடைக்கும் பணத்தினையும் விளம்பரதாரர்களுக்கு கொடுக்கிறது.இதன் மூலம் விளம்பர காரர்களை நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்கிறது.
இயந்திரத்தால் கண்டறிய முடியாத பிரச்சினைகளை கண்டறிந்து மனிதர்களை வைத்து கண்டறிகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
நவீன உலகில் வலைத்தளத்தில் உள்ள கட்டுரை களை மனிதர்கள் பார்க்காமல் இயந்திரங்களை வைத்து பார்ப்பதற்கு நிறைய Software உள்ளன இதனை கண்டறிய கூகுளில் தனிப்பட்ட என்ஜினீயர்கள் மற்றும் இயந்திர கருவிகள் உள்ளன.
Publisher Responsiblities
ஒரு வலைதளத்தில் கட்டுரை எழுதும் பட்சத்தில் வலைதளத்திற்கு பார்வையாளர்கள் எங்கிருந்து வரவேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.கட்டுரைகளின் அளவிற்கு தகுந்தவாறு விளம்பரங்களை காட்ட வேண்டும்.
குறைந்த அளவு உள்ளடக்கம் இருக்கும் பட்சத்தில் அதிகமான விளம்பரங்களை வலைதளத்தில் கொடுத்தால் கிளிப்ஸ் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது இதனால் அக்கவுண்ட் முடக்கம் செய்யப்படலாம்.
பெயரே தெரியாத நெட்வொர்க் இடமிருந்து வலை தளத்திற்கு பார்வையாளர்களை கொண்டு வருவது ஒரு மிகப்பெரிய குற்றமாகும்.
சில நபர்கள்என்னுடைய விளம்பரங்களை கிளிக் செய்தால் நான் உன்னுடைய விளம்பரங்களை கிளிக் செய்கிறேன் என்ற நோக்கின் போக்கில் செயல்படுகின்றனர் இவ்வாறு செய்தால் போதுமானது உங்களை எளிதில் கண்டறிந்து விடும்.
தேவை இல்லாத மின்னஞ்சல் அல்லது சாப்ட்வேர் களிடமிருந்து வலைதளத்திற்கு போக்குவரத்தை பெறுவதால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
Invalid Traffic மூலம் ஏற்படும் Invalid Activity
வலைதளத்தில் போக்குவரத்தை அதிகப்படுத்த தவறான வழியை கடைப்பிடிப்பதால் Invalid Activity பிரச்சனைகள் பெரும்பாலும் ஏற்படுகிறது. வலைதளத்தில் Click Through Rate அதிகரித்தால் அதுவும் ஒரே நபர் திரும்பத் திரும்ப விளம்பரங்களை கிளிக் செய்தால் தகவலை கூகுளுக்கு தெரியப்படுத்தவும்.
Report Case Invalid Activity
உதாரணமாக Invalid Activity இணையதளத்தில் காண்பிக்கப்பட்ட ஆல் கூகுளுக்கு அதனை பரிந்துரைக்க வேண்டும். கூகுள் ஆனது நமது வலைதளத்திற்கு வரும் பார்வையாளர்களின் தரவை பரிசோதித்துஎந்த இடத்தில் பிரச்சனைகள் நிகழ்ந்திருக்கிறது என்பதை தானியங்கி இயந்திரங்களின் மூலமும் மனிதர்களை வழியாகவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சி எடுக்கிறது.
சில சமயங்களில் இந்த தானியங்கி இயந்திரங்கள் பிரச்சினைகளை கையாள்வதற்கு தேவையான அறிவைப் பெற்றிருப்பது இல்லை அத்தகைய நேரத்தில் கூகுளின் பணியாற்றும் நிர்வாகி இதனை தனியாக மறுபதிப்பு செய்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
How To Apply Invalid Activity Form
வலை தளத்திற்கு அதிகமான போக்குவரத்தை கொண்டுவர தவறான வழியை கடைபிடித்தால் கூகுள் ஆட்சென்ஸ் அது நிரந்தரமாக தடை செய்யப்படும். அவ்வாறு தடை செய்யும் பட்சத்தில் கணக்கை திரும்ப எடுக்க முடியாது.
ஒருவேளை வலைதளத்தில் தனிப்பட்ட நபர் செய்யும் காரணத்திற்காக கூகுள் ஆட்சென்ஸ் முடக்கப்பட்டால் நீங்கள் கணக்கை திரும்ப எடுக்க கூகுளுக்கு பரிந்துரை செய்யலாம்.
Google Adsense Invalid Traffic form
உங்கள் வலைதளத்தின் மொத்த தரவுகளையும் ஆராய்ந்து சரியாக இருக்கும் பட்சத்தில் ஆட்சென்ஸ் கணக்கு திரும்ப கொடுக்கப்படும்.
வலைதளத்தில் வரும் பார்வையாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள் எந்த சோசியல் மீடியா வின் வழியாக உங்கள் தளத்தை பார்வையிடுகின்றனர் என்கிற மொத்த தகவலையும் Google Analytics மூலம் அறிந்து கொள்ளலாம்.
Google Analytics பயன்படுத்துவதால் வலைதளத்தில் எந்த விதமான பிரச்சனைகளை இன்றி சிறப்பான முறையில் நடைமுறைப் படுத்தலாம்.