கூகுள் அட்சென்ஸ் என்றால் என்ன

கூகுளால் வழி நடத்தப்படும் ஒரு இணையதளம் ஆகும். இதன் வழியாக யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் இணையதளத்தில் கட்டுரை எழுதுபவர்கள் புதிதாக செயலி தொடங்குபவர்கள் போன்ற இணையதள வெளியீட்டாளர்களுக்கு விளம்பரங்கள் வழியாக பணம் வழங்கும் ஒரு தளமாகும்.

கூகிள் ஆட்சென்ஸ் தொடங்குவதற்கு உங்களிடம் ஜிமெயில் கணக்கு இருந்தால் போதுமானது.இந்த இணையதளத்தின் சென்று https://www.google.com/adsense/ ஆட்சென்ஸ் தொடங்கிக் கொள்ளலாம்.

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் இன் வழியாக அட்சென்ஸ் நுழைந்து உங்களின் இணையதளத்தின் முகவரியை இணைத்து உங்களுடைய பெயர் மற்றும் வீட்டின் முகவரி மற்றும் நாடு ஆகியவற்றை கொடுத்து இதன் மூலம் உங்களுடைய இணையத்தளத்தை இணைக்கலாம்.

Hosted Adsense Non Hosted Adsense

கூகிள் ஆட்சென்ஸ் இல் இரண்டு விதமான கூகுள் ஆட்சென்ஸ் உள்ளன ஒன்று
Hosted Adsense மற்றொன்று Non Hosted Adsense ஆகும்.

Hosted Adsense Account

யூடியூப் சேனல் இன் வழியாக adsense லிங்க் செய்து  கிடைக்கப்பெறும்  அக்கவுண்ட் hosted adsense ஆகும்.மேலும் பிளாக்கர் (blospot)வழியாக லிங்க் செய்து கிடைக்கப்பெறும் கூகுள் ஆட்சென்ஸ் அக்கவுண்ட் hosted adsense  ஆகும்.

யூடியூப் சேனல் வைத்து AdSense தொடங்கி இருந்தால் அதில் AdSense Home பகுதில் உள்ள டாலர் பூஜ்ஜியம் அமைப்பில் இருக்கும். காரணம் யூடியூபில் தினமும் கிடைக்கும் பணமானது யூடியூபில் மட்டுமே பார்க்க இயலும். AdSense இல் பார்க்க இயலாது, இதனை  Hosted AdSense  என்று அழைப்பார்கள்.

Non Hosted Adsense Account

தனியாக ஒரு இணைய தளத்தை உருவாக்கி அதன் வழியாக ஆக்சன் சீன் தொடர்பு கொண்டு உருவாக்கப்பட்ட அக்கவுண்ட் non hosted adsense account ஆகும்.

உதாரணமாக நீங்கள் ஒரு பிளாக் ஸ்பாட் பிளாகர் வைத்துள்ளதாக எடுத்துக்கொள்வோம் .அதில் டொமைன் வாங்கி புதிதாக ஒரு கூகுள் ஆட்சென்ஸ் (Google adsense)signup செய்தாள் அது (Non Hosted Adsense Account) ஆக மாற்றப்படும்.

உதாரணமாக நீங்கள் பிளாக்ஸ்பாட் பெயர் வைத்து கூகுள் ஆட்சென்ஸ் லிங்க் செய்தால் அது hosted adsense account ஆகும்.Non Hosted Adsense அக்கவுண்ட்டினை hosted adsense account ஆக மாற்ற இயலாது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

வலைத்தளம் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே முகப்பு திரையில் எத்தனை வருவாய் கிடைத்துள்ளது என்பதை நம்மால் காண முடியும். வலைதளம் வைத்துள்ளவர்களுக்கு பூஜ்ஜியம் டாலர் அமைப்பு  இருக்காது. இதனை Non Hosted AdSense எனலாம். இவ்வகை AdSense இல் யூடியூப் சேனல்  இணைத்துக்கொள்ளலாம்.

Ads.txt

Blogger

 

wordpress Ads.txt

blogger மற்றும் WordPress இல் Ads.text Notification தோன்றும் போது அதனை டவுன்லோட் செய்ய வலைதளத்தில் இணைக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள Ads.text பைலை இணைய தளத்தில் இணைக்க வில்லை என்றால் வலைத்தளத்திற்கு வரும் விளம்பரங்கள் மற்றும் பணம் வருவதற்கான வாய்ப்புகள் நிறுத்தி வைக்கப்படும்.

வலைத்தளம் வைத்துள்ள அனைவரும் ads.text கட்டாயமாக இணைத்துக் கொள்ள வேண்டும்.

AdSense இல் அவ்வபோது வெளியிடப்படும் புதிய அப்டேட்களை நோட்டிபிகேஷன் நில் காண முடியும். இதனை பின்பற்றி புதிதாக இணைக்கப்படும் பதிப்புகளை அறிந்து கொள்வது நல்லது.

எத்தனை ஆட்சென்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கலாம்

கூகுள் அட்சென்ஸ்(google adsense) பாலிசி படி ஒரு நபருக்கு ஒரு கூகுள் அட்சென்ஸ் என்ற வகையில் கணக்கிடப்பட்டுள்ளது உங்களிடம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அட்சென்ஸ் அக்கவுண்ட் இருந்தால் கூகுள் அட்சென்ஸ் இல் இருந்து மற்ற அக்கவுண்ட்டினை நீக்க பரிந்துரைக்கப் படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கூகுள் ஆட்சென்ஸ் இணையும் இணையதளங்கள்

கூகுள் அட்சென்ஸ் (google adsense) இல் யூட்யூப் மற்றும் வலைத்தளங்களை(website) இணைக்க முடியும்.யூடியூபில் ஆட்சென்ஸ் இணைக்க 1000 சந்தாதாரர்கள் மற்றும் நாலாயிரம் மணிநேரம்(4000 watch hour) வீடியோக்களை பார்வையிட்டு இருந்தால் ஆட்சென்ஸ் இணைக்கலாம்.

உங்களது வலைத்தளத்தை ஆட்சென்ஸ் இணைக்க போதுமான உள்ளடக்கம் மற்றும் தேவையான பதிவுகள் சொந்தக் கருத்துக்களாக இருக்கும் பட்சத்தில் அதனை எளிதாக ஆட்சென்ஸ் இணைக்க முடியும்.

நீங்கள் பதிவுசெய்யும் கட்டுரைகள் யாரையும் பின்பற்றாத வண்ணம் இருக்க வேண்டும்.உங்களுடைய சொந்த முயற்சியில் உருவாக்கப் பட்டிருந்தால் கூகிள் ஆட்சென்ஸ் எளிதாக அனுமதி வாங்கலாம்.

Admob அக்கவுண்டை கூகிள் ஆட்சென்ஸ் (google adsense) இல் இணைக்க இயலாது இதற்கென்று தனியாக google admob வலைத்தளம் உள்ளது அதில் சென்று உங்களுடைய செயலியை இணைக்கலாம்.இதற்கென்று எந்த வித வரைமுறையும் கிடையாது admob அக்கவுண்ட்டினை (admob) செய்தால் போதுமானது.

CPC என்றால் என்ன

(Cost per click)நீங்கள் வைத்திருக்கும் இணையதளத்தில் பதிவு செய்யும் விளம்பரங்களுக்கு ஒரு கிளிக் எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்பதை தான் சிபிசி என்பார்கள். இந்தசிபிசி (cpc) யானது நாடுகளைப் பொறுத்து மாறுபடும்.எந்த நாட்டிலிருந்து விளம்பரங்களை கிளிக் செய்து உள்ளனர் என்பதனை பொருத்து அந்த நாட்டிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் சிபிசி அளவு மற்றும் நீங்கள் பதிவு செய்யும் கட்டுரைகளுக்கு ஏற்றார்போல் மாறுபடும்.

உதாரணமாக நீங்கள் எழுதும் கட்டுரைகளை அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் உள்ள பார்வையாளர்கள் உங்கள் விளம்பரங்களை கிளிக் செய்தால் அதற்கேற்றார்போல் cpc அதிகரிக்கும்.

விளம்பரதாரர் கொடுக்கும் விளம்பரத்தினை ஒரு பெண்ணிற்கு இவ்வளவு பணம் என்று விகிதத்தில் பிரிக்கும் அளவு என்று வைத்துக் கொள்ளலாம். அதாவது ஒரு கிளிக் இருக்கு இவ்வளவு பணம் ஆகும்.

CPM என்றால் என்ன

இந்த சிபிஎம் cpc ஆனது இணையத்தள வெளியீட்டாளர் களுக்கும் மற்றும் விளம்பரங்களை கொடுக்கும் விளம்பரதாரர் களுக்கும் பொருந்தும் அமைப்பாகும்.

(Cost per thousand)கூகுளில் விளம்பரம் கொடுக்கும் விளம்பரதாரர் அவருடைய விளம்பரத்தை ஆயிரம் நபர்கள் பார்த்தால் எவ்வளவு பணம் கொடுக்கிறாரோ அதுதான் சிபிஎம் ஆகும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அவருடைய விளம்பரங்களை பார்வை இடுவதற்கான விளம்பரதாரர் கொடுக்கும் பணத்தின் அளவு சிபிஎம் ஆகும்.

உதாரணம் CPC CPM

உதாரணமாக யூடியூபில் நீங்கள் ஒரு வீடியோவை பார்வையிடும் போது அதில் காண்பிக்கப்படும் விளம்பரம் ஒரு விளம்பரதாரர் கொடுத்தது என்று வைத்துக்கொள்வோம்.

விளம்பரதாரர் விளம்பரத்தினை கொடுக்கும்பொழுது ஆயிரம் பார்வை யாளர்களுக்கு ஒரு விதத்திலும் விளம்பரத்தை கிளிக் செய்தால் ஒரு விகிதத்திலும் பணத்தினை கூகுளுக்கு கொடுத்திருப்பார்கள் அந்தவிதத்தில் சிபிஐ சிபிஎம் கணக்கிடப்பட்டு கூகிள் ஆட்சென்ஸ் காண்பிக்கப்படும்.

அமேசான் விளம்பரதாரர் ஒரு விளம்பரத்தினை இணையதளத்திற்கு கொடுத்திருந்தால் அந்த விளம்பரத்தினை கிளிக் செய்தால் அது சிபிசி விளம்பரத்தினை பார்வை செய்தால் அது சிபிஎம் ஆகும்.

உதாரணமாக அமேசான் செயலி அந்த விளம்பரத்தில் காண்பிக்கபட்டாள் அதனை கிளிக் செய்து அந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் அது சிபிசி கணக்கில் வரவு வைக்கப்படும்.

CTR என்றால் என்ன

(Click through rate)நமது பிளாக்கர் மற்றும் யூட்யூப் வலைதளங்களில் காண்பிக்கப்படும் விளம்பரங்களை கிளிக் செய்து பார்வையிடுவது ctr ஆகும்.

உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் நமது பிளாக்கர் மற்றும் யூட்யூப் வலைத்தளங்களில் காண்பிக்கப்படும் விளம்பரங்களை தொடர்ந்து கிளிக் செய்து அதில் எந்தவிதமான உபயோகமும் இல்லாமல் விட்டுவிட்டால் அதனை கூகுள் ஆக்சன்ஸ் பார்வையிட்டு ஆக்சன் எடுப்பார்கள் அதற்காக இந்த ctr உபயோகம் படுகிறது.

உதாரணமாக விளம்பரம் கொடுக்கும் விளம்பரதாரர் நஷ்டம் அடையாமல் இருப்பதற்கு இந்த ctr ஆனது உபயோகப்படுகிறது. உங்கள் கூகுள் ஆட்சென்ஸ் ctr அளவு உயர்ந்தால் இதனை கூகுள் அட்சன்ஸ் எனது எளிதில் காண இயலும்.

ஒரு குறிப்பிட்ட அளவு CTR அதிகமானால் இதனை கண்டுகொண்டு கூகிள் ஆட்சென்ஸ் கஸ்டமரை தொடர்புகொண்டு உங்கள் தரப்பில் எந்தவித தவறும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.அப்படி செய்யவில்லை என்றால் உங்களுடைய ஆக்சன்ஸ் நிரந்தரமாக முடக்கி வைக்கப்படும் என்பதை இதில் நான் கூற விரும்புகிறேன்.

CPA என்றால் என்ன

(Cost per action)கூகுள் ஆட்சென்ஸ்(google adsense) விளம்பரம் கொடுக்கும் விளம்பரதாரர் விளம்பரத்தைப் பார்த்தால் ஒரு பணமும் கிளிக் செய்தால் ஒரு பணமும் கிளிக் செய்த விளம்பரத்தை உபயோகித்தால் ஒரு பணமும் கொடுப்பார்கள் அந்த வகையில் நீங்கள் அமேசானில் ஒரு விளம்பரத்தை பார்த்து கிளிக் செய்து அக்கவுண்ட் உருவாக்கி அதனை உபயோகித்தால் அதனை காஸ்ட் பேர் ஆக்சன் எனலாம்.

RPM என்றால் என்ன

 

(REVENUE PER THOUSAND IMPRESSIONS) இதன் வேலை CPM,CPC,CPA,CTR இதன் வழியாக வந்த பணத்தினை அளவு செய்து கூகுள் ஆட்சென்ஸ் தன்னுடைய பங்கை எடுத்துக் கொண்டு உங்களுக்கு கொடுக்கும் பணத்தினை பிரித்து கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஆர்பிஎம் இதனை PAGE RPM அழைப்பார்கள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஐந்து விதிமுறைகளை பின்பற்றி கூகுள் ஆட்சென்ஸ் ஆனது இயங்குகிறது இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் உங்கள் ஆக்சன்ஸ் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படும்.

கூகுள் ஆட்சென்ஸ் பின் நம்பர் எப்போது வரும்

 

உங்களுடைய கூகுள் ஆட்சென்ஸ்(Google Adsense) ஆனது பத்து டாலரை அடைந்தவுடன் நீங்கள் கொடுத்திருக்கும் வீட்டின் முகவரிக்கு கூகுள் ஆட்சென்ஸ் தரப்பில் இருந்து ஆறு இலக்க பின் நம்பர் அனுப்பி வைக்கப்படும்.

 

அதனை கூகுள் ஆட்சென்ஸ்(Google Adsense) இல் இணைத்து இணைத்துக் கொள்ள வேண்டும். பின் நம்பரை கூகுள் ஆட்சென்ஸ் இணைத்த பின்னர் உங்களுடைய கூகுள் ஆட்சென்ஸ் ஆனது செயல்படுத்தப்படும்.

வீட்டிற்கு பின் நம்பர் வரவில்லை என்றால் உங்களுடைய முகவரியை சரிபார்த்து கொள்ள வேண்டும். அஞ்சல் முகவரி சரியாக இருக்கும் பட்சத்தில் இரண்டு வாரத்திற்குள் உங்களது வீட்டிற்கு கூகுள் ஆட்சென்ஸ் தரப்பிலிருந்து பின் நம்பர் அனுப்பி வைக்கப்படும்.

இரண்டு வாரத்திற்குள் பின் நம்பர் வரவில்லை என்றால் நீங்கள் கூகுள் ஆட்சென்ஸ் சென்று புதிய பின் நம்பர் வர பரிந்துரை செய்ய வேண்டும்.இது போல் மூன்று தடவை மட்டும்தான் பரிந்துரைக்க முடியும் அதற்கு மேல் பரிந்துரைக்க இயலாது.பின் நம்பர் கொடுக்கும் பொழுது சரியாக சரியான பின் நம்பரை பார்த்து கொடுத்தல் மிகவும் அவசியம்.

கூகுள் ஆட்சென்ஸ் ID Verfication

 

கூகுள் ஆட்சென்ஸ் (Google Adsense)உங்களுடைய போட்டோவுடன் கூடிய ஐடி வெரிபிகேஷன் செய்யும் பொழுது கவனிக்க வேண்டியது. நீங்கள் கொடுக்கும் போட்டோ வானது தெளிவாக இருக்கும் பட்சத்தில் சீக்கிரமாக அனுமதி வழங்கப்படும்.

அடையாள அட்டையில் உள்ள பெயர் கூகுள் ஆட்சென்ஸ் இன் உள்ள பெயர் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் அனுமதி கொடுக்கப்படும்.

உங்களுடைய அடையாள அட்டையை பதிவேற்றம் செய்யும் முன்பு கூகுள் ஆட்சென்ஸ் என்ன பெயர் கொடுத்து உள்ளீர்கள் என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். அதே பெயர் உள்ள அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும் இரண்டும் ஒரே பெயராக இருக்கும் பட்சத்தில் 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்கப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட முகவரி சான்றிதழை மட்டுமே கொடுக்க இயலும் நீங்கள் கொடுக்கும் அடையாள அட்டையில் உள்ள முகவரியும் கூகுள் ஆட்சென்ஸ் உள்ள முகவரியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

பின் நம்பர் கொடுக்கும்போது சரியான பின் நம்பரை பார்த்து கொடுத்தால் மிகவும் நல்லது நீங்கள் கொடுக்கும் பெண் நம்பர் தப்பாக இருக்கும்பட்சத்தில்.

ID Verification Action Notification

சமீபத்தில் AdSense இல் புதிய பதிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கு முன்பு யூடியூப் மற்றும் வலைதளங்களில் சம்பாதிக்கும் பணமானது பத்து டாலரை அடைந்தவுடன் AdSense இல் முகப்பு திரையில்  (Action Notification) தோன்றும் அதில் சென்று நமது அடையாள அட்டை மற்றும் AdSense இலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் நம்பரை கொடுக்க வேண்டி இருக்கும். அவ்வாறு செய்தால் மட்டுமே நமது AdSense Account  ஆனது ஆக்டிவேட் செய்யப்படும்.

ஆனால் இப்பொழுது ஆக்சன் நோட்டிபிகேஷன் ஆனது, யூடியூப் மற்றும் வலைத்தளம் ஆக்சன்ஸ் புரோகிராமில் இணைக்கப்பட்ட உடனே (AdSense Home) முகப்பு திரையில் Action Notification தோன்றும்,அதில் சென்று அடையாள அட்டை மற்றும் பின் பின் நம்பரை உடனே கொடுத்து அனுமதி பெறலாம்.

10 டாலர் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.AdSense முகப்பு திரையில் வலைத்தளம் தொடர்பான வற்றை மட்டுமே அதிகமாக காண இயலும்.யூடியூப் தொடர்பான செய்திகள் மிகவும் குறைவாகவே முகப்பு திரையில் தோன்றும்.

கூகுள் ஆட்சென்ஸ் வங்கி கணக்கு இணைத்தல்

கூகுள் ஆட்சென்ஸ்(Google Adsense) வங்கி கணக்கு இணைக்க முன்பு வங்கியில் என்ன பெயர் கொடுத்து உள்ளீர்கள் என்பதை சரிபார்த்து அதே பெயரை கொடுக்க வேண்டும்(ex.MUTHU P) வங்கி கணக்கில் உள்ள பெயர் மற்றும் வங்கியில் கொடுக்கப்படும் அக்கவுண்ட் நம்பர் ஐஎப்எஸ்சி கோடு(IFSC CODE) ஷிப்ட் கோடு (SWIFT CODE)ஆகியவற்றை கொடுத்தல் வேண்டும்.

வங்கியில் எப்பொழுது பணம் வரும்

100 டாலர் எட்டியவுடன் கூகிள் ஆட்சென்ஸ்(Google Adsense) இல் இருந்து உங்களுடைய வங்கி கணக்கிற்கு பணம் மாற்றப்படும்.நீங்கள் யூடியூப் வைத்திருக்கும் பட்சத்தில்(EX MARCH 1 TO MARCH 31) மாதம் முதல் தேதியிலிருந்து 31-ஆம் தேதி வரை உள்ள டாலர் அடுத்த மாதம்( APRIL 11 ) ஏப்ரல் பதினோராம் தேதி ஆட்சென்ஸ் கணக்கு மாறுதல் செய்யப்படும்.

100 டாலருக்கும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உதாரணமாக ஏப்ரல் 11ஆம் தேதி உங்கள் ஆட்சென்ஸ் கணக்கில் வரவு வைக்கப்படும் பணமானது அதே மாதத்தில் 21 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதிக்குள் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கப்படும். பணம் அனுப்பி வைக்கும் முன்பு கூகுள் ஆட்சென்ஸ் தரப்பிலிருந்து குறுஞ்செய்தி உங்களுடைய ஜிமெயில் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில் பணம் அனுப்புவதற்கான கடவுச்சீட்டு கொடுக்கப்பட்டிருக்கும் அதில் பணம் அனுப்பியதற்கு முழு தகவலையும் காணலாம். ஒருவேளை உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை என்றால் வங்கியில்சென்று இந்த கடவுச்சீட்டை காட்டி நீங்கள் வங்கியில் முறையிடலாம்.

வங்கியில் பணம் வரவில்லை என்றால் கூகுள் ஆட்சென்ஸ் தொடர்பு கொண்டு உங்களுடைய கருத்தை கூறினால் கூகுள் ஆட்சென்ஸ் லிருந்து தீர்வு எடுக்கப்படும்.உங்களுடைய பணத்தை அடுத்த மாதத்தில் அல்லது இடைப்பட்ட காலத்தில் உங்களுடைய வங்கி கணக்கிற்கு கூகுள் ஆட்சென்ஸ் தரப்பில் இருந்து பணம் அனுப்பி வைக்கப்படும்.

எத்தனை வங்கி கணக்கினை இணைக்க இயலும்

கூகுள் ஆட்சென்ஸ் இல் எத்தனை வங்கி கணக்கையும் இணைக்க இயலும்.யாருடைய வங்கிக் கணக்கையும் நீங்கள் எளிதாக கூகிள் ஆட்சென்ஸ் இல் இணைக்கலாம்.

ஆனால் நீங்கள் கொடுக்கும் (PRIMARY ACCOUNT) வங்கிக் கணக்கிற்கு மட்டுமே கூகுள் ஆட்சென்ஸ் தரப்பிலிருந்து பணம் அனுப்பி வைக்கப்படும்.

உங்களுடைய அப்பாவுடைய வங்கிக்கணக்கு அம்மாவின் வங்கி கணக்கு அண்ணனின் வங்கி கணக்கு யாருடைய வங்கிக் கணக்கையும் நீங்கள் எளிதாக க கூகுள் ஆட்சென்ஸ் இணைக்கலாம் எந்தவித பிரச்சினையும் கிடையாது என்பதை இதில் குறிப்பிட விரும்புகிறேன்.

கூகுள் ஆட்சென்ஸ் செய்யக்கூடாதவை

கூகுள் அட்சென்ஸ் (Google Adsense) அக்கவுண்ட் கிடைத்தவுடன் அதில் காண்பிக்கப்படும் விளம்பரங்களை நாம் கிளிக் செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் நமது அக்கவுண்ட் ஆனது நிரந்தரமாக முடக்கி வைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

எந்தவித தயவு தாட்சண்யம் பார்க்காமல் கூகிள் ஆட்சென்ஸ் தரப்பிலிருந்து நிரந்தரமாக முடக்கி வைக்கப்படும் என்பதை கூற விழைகிறேன். நாம் பட்ட கஷ்டங்கள் எல்லாம் அந்த ஒரு நொடியில் காணாமல் போகும் ஆக்சன்ஸ் அக்கவுண்ட் இல்லை என்றால் நாம் பணம் சம்பாதிக்க இயலாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நமது நண்பர்களுக்கு சொல்லி விளம்பரத்தினை கிளிக் செய்ய வைப்பது பெரும் குற்றமாகும். அவ்வாறு செய்தால் கூகுள் அட்சென்ஸ் உங்களை எளிதாக கண்டுபிடித்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு தெரியாமல் உங்கள் நண்பர்கள் கூகுள் அட்சென்ஸ் காண்பிக்கப்படும் விளம்பரத்தினை கிளிக் செய்தால் நீங்கள் சொல்லித்தான் கிளிப் செய்ததாககூகுள் அட்சென்ஸ் தரப்பில் எடுத்துக்கொள்ளப்படும். உங்கள் அக்கவுண்ட் நிரந்தரமாக முடக்கி வைக்கப்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

உங்கள் நண்பர்கள் உங்களது விளம்பரத்தினை உங்களுக்கு தெரியாமல் கிளிக் செய்தால் CTR அதிகரிப்பதை வைத்து உங்களால் கண்டு கொள்ள இயலும். அதனை தவறாமல் கூகுள் அட்சென்ஸ் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவும் அவ்வாறு செய்யவில்லை என்றால் உங்கள் அக்கவுண்ட் உங்களிடம் இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

100 டாலருக்கும் குறைவாக பணம் எடுக்க முடியுமா
கூகுள் அட்சென்ஸ் அக்கவுண்ட்டினை தாமாக முன்வந்து கேன்சல் செய்தால் அக்கவுண்டில் உள்ள பணம் உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

Google Adsense desabled செய்யப்பட்டால் அக்கவுண்டில் உள்ள பணம் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்படாது.அக்கவுண்டில் உள்ள பணத்தினை கூகுள் அட்சென்ஸ் எடுத்துக்கொள்ளும

அக்கவுண்டில் உள்ள அனைத்து பணத்தினையும் நஷ்டப்பட்ட விளம்பரதாரர்களுக்குகூகுள் அட்சென்ஸ் தரப்பில் பகிர்ந்தளிக்கப்படும் என்பதனை இந்த நேரத்தில் கூற விரும்புகிறேன்.

கூகுள் ஆட்சென்ஸ் Invalid Activity எதனால் ஏற்படுகிறது

கூகுள் அட்சென்ஸ் (Google Adsense) விதிகளை மதிக்காமல் கட்டுரை எழுதுவது வீடியோ பதிவேற்றம் செய்வது தனது நண்பர்களின் மூலம் தன்னுடைய விளம்பரங்களை கிளிக் செய்ய வைப்பது வலைத்தளத்தில் கட்டுரை அதிகம் இல்லாத நேரத்தில் அதிகமான விளம்பரங்களை பக்கத்தில் இடுவது போன்ற குற்றத்திற்காக கூகுள் அட்சென்ஸ் தரப்பிலிருந்து Invalid Activity என்ற குறுஞ்செய்தி உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் இருக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள பற்றை பின்பற்றாமல் செய்தால் உங்களுடைய அக்கவுண்ட் ஆனது நிரந்தரமாக முடக்கி வைக்கப்படும். நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் காணாமல் போகும் என்பதனை நினைவில் கொள்க.
இவ்வாறாக உங்கள் அக்கவுண்ட் நிரந்தரமாக முடக்கப்பட்டால் உங்கள் அக்கவுண்டில் உள்ள படம் உங்களுக்கு வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் நீங்கள் அவர்களுக்கு தொடர்பு கொண்டாலும் 99% உங்களுடைய அக்கவுண்ட் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை நீங்கள் தவறு ஏதும் செய்யாமல் இருந்தால் உங்கள் அக்கவுண்ட் திரும்ப கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here